கட்டிப்பிடித்த கண்ணீர் விட்டு கதறிய ஸ்டாலின்..ஒட்டுமொத்த தமிழகத்தையே கண்ணீரில் ஆழ்த்திய தருணம்..

திமுக தலைவர் கருணாநிதி அடக்கம் செய்யப்படுவது தொடர்பான வழக்கில் மெரினாவில் இடமளித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் மெரினாவில் இடம் வழங்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. அதையடுத்து, தி.மு.க சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ரமேஷ் இல்லத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.நேற்றிரவு நடந்த விசாரணையின் முடிவில் தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் இன்று காலை 8 மணிக்கு அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும்.

எனவும், 8.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் எனவும் உத்தரவிட்டனர்.இதனை தொடர்ந்து இன்று காலை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குழுவாடி ரமேஷ், நீதிபதி சுந்தர அமர்வு விசாரணை நடத்தியது.அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்த நிலையில், மெரினாவில் இடம் ஒதுக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை அறிந்த ராஜாஜி மண்டபத்தில் இருந்த ஸ்டாலின், கனிமொழி தயாநிதி அழகிரி ஆகியோர் கண் கலங்கினார் இந்த சம்பவம் அங்கு கூடி இருந்த அனைவரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தியது.வைரலாகி வரும் அந்த வீடியோ பதிவு இதோ