தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் துரோகம் செய்த மனைவியை, கணவன் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நடராஜபுரம் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து. இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னதாக விமலா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். விமாலாவிற்கு அதேபகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாரிமுத்து ஆட்டோ ஓட்ட சென்றதும், கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து விமலா மகிழ்ச்சியாக இருந்துவந்துள்ளார்.
அரசல்புரசலாக இந்த செய்தியை கேள்விப்பட்ட மாரிமுத்து, பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் பொலிஸார் நடவடிக்கை எடுக்க மறுத்து மனைவியை கண்டிக்குமாறு மாரிமுத்துவிற்கு அறிவுரை வழங்கியுள்ளனர். ஆனால் அவர்களுடைய பழக்கம் தொடர்ந்ததால், வீட்டை காலி செய்ய முடிவெடுத்த மாரிமுத்து பக்கத்துக்கு தெருவிற்கு குடிபெயர்ந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு புது வீட்டிலேயே அனைவரும் உறங்கியுள்ளனர். அதிகாலையில் குழந்தை அழும் சத்தம் கேட்டு எழுந்த மாரிமுத்து, மனைவி மயமாகியிருப்பதை பார்த்து பழைய வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு விமலா தன்னுடைய கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்த மாரிமுத்து ஆத்திரத்தில் அங்கிருந்த இரும்புக்கம்பியை கொண்டு அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு நேரடியாக பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ளார்.