சென்னை மெரீனா கடற்கரை மணலில் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.மதுரையை சேர்ந்த கலைச்செல்விக்கு கணவன், 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர் அடிக்கடி சென்னை வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.அடிக்கடி சென்னை போவதால், கணவரிடன் சண்டை வந்து ஒரேடியாக சென்னைக்கே வந்துவிட்டார்.2 மாதமாக சென்னையில் தங்கியிருந்த கலைச்செல்விக்கு ஆட்டோ டிரைவர்களான பிரேம்குமார், சூர்யா என்ற 2 பேர்களிடம் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் அதே பகுதியில் சந்தியா (19) மற்றும் ஷீலா பிரியா (26) ஆகிய இருவரும் பாலியல் தொழில் செய்து வந்தார்கள்.இந்நிலையில் கலைச்செல்வியால் தங்கள் தொழிலுக்கு பாதிப்பு வருவதாக இருவரும் கருதியுள்ளார்கள்.இதனிடையில் கலைச்செல்வியுடன் பழக்கத்தை விட்ட பிரேம்குமார் மற்றும் சூர்யா, சந்தியா மற்றும் ஷீலாவுடன் பழக தொடங்கினர்.
இதையடுத்து தங்கள் தொழிலை காப்பாற்ற கலைச்செல்வியை கொலை செய்யுமாறு இருவரிடமும் சந்தியா மற்றும் ஷீலா முறையிட்டனர்.இதன்பின்னர் தான் இருவரும் சேர்ந்து கலைச்செல்வியை கொலை செய்து மண்ணில் புதைத்துள்ளனர்.
இந்த கொலை நடந்த சமயத்தில் சந்தியாவும், ஷீலாபிரியாவும் சம்பவ இடத்தில்தான் இருந்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களை பொலிசார் செய்தார்கள்.தற்போது கைது செய்யப்பட்ட நால்வரிடமும் விசாரணை நடந்து வருகிறது.