கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு பல உதவிகளை பலரும் செய்து வந்தனர். இந்நிலையில் அரந்தாங்கி நிஷா பல காணொளிகளை வெளியிட்டு, நேராக சென்று உதவி செய்தார். இதனை பலரும் கலாய்த்து பேசினர். ஒருவர் பிச்சை எடுக்கிறீர்களா என்று கேள்வியினை எழுப்பியிருந்தார். அதற்கு அரந்தாங்கி நிஷா ஆமா நான் பிச்சை தான் எடுக்கிறேன் என்று சற்றும் தளறாமல் கம்பீரமாக பேசி காணொளிகளை வெளியிட்டார். அவர் வெளியிட்ட காட்சிகளை அவதானித்த பலரும் பொருள் உதவி செய்திருந்தனர்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிஷா செய்த உதவியால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய நற்பெயரைப் பெற்றுள்ளார். இந்நிலையில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் தனது கொமடித்தனமாக பேச்சினால் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார். கடைசியில் தனது கணவரை நகைச்சுவைக்காக அசிங்கப்படுத்தும் விதமாக பேசிவிட்டு அவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இக்காட்சி தற்போது தீயாய் பரவி வருகிறது.