கணவர் இறுதிச்சடங்கு நாளில் மனைவி செய்த நெகிழ்ச்சி செயல்: குவியும் பாராட்டு

இந்தியாவில் அமைச்சராக பணியாற்றிய அனந்த்குமார் என்பவர் இறந்த அன்றும் அவர் மனைவி தனது தொண்டு நிறுவனம் மூலம் வறுமையால் வாடும் குழந்தைகளுக்கு உணவை அளித்துள்ளார்.மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக இருந்த அனந்த்குமார் புற்றுநோய் பாதிப்பு காரணமாக கடந்த 12-ஆம் திகதி உயிரிழந்தார். பெங்களூரை சேர்ந்த அனந்த்குமார் தனது மனைவி தேஜஸ்வினியுடன் சேர்ந்து அடம்யா சேதனா பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்நிறுவனம் மூலம் பெங்களூரில் உள்ள 300 அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் 40,000 பேருக்கு தினமும் உணவுகள் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் அனந்த்குமார் இறந்த அன்று காலையில் அங்கு உணவுகள் தயாரிக்கப்பட்டு வந்தது. அப்போது தான் அனந்த்குமார் இறந்துவிட்டார் என்ற செய்தி அங்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உணவுகள் தயாரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கணவரின் இறுதிச்சடங்கு நடக்கும் தினமாக இருந்தாலும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என தேஜஸ்வினி கூறியுள்ளார்.

அதே நேரத்தில் அன்று பள்ளிக்கூடங்களுக்கு அனந்த்குமார் மறைவு காரணமாக விடுமுறை விடுக்கப்பட்டது. ஆனால் தயார் செய்யப்பட்ட உணவானது வீணாகி விடக்கூடாது என்று அனந்த்குமார் தத்தெடுத்த

Raagihalli என்ற கிராம மக்களுக்கு தரப்பட்டதோடு சேரிகளில் வாழும் மக்களுக்கும் தரப்பட்டது.இதனிடையில் கணவர் இறந்த அன்றும் தேஜஸ்வினியின் பொறுப்புணர்வு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.