தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகைகளின் வரிசையில் நளினியும் ஒருவர், இவர் 80 மற்றும் 90-களில் ஒரு மிகப் பெரிய நடிகையாக வலம் வந்தவர். அதன் பின் தன்னுடைய வயதிற்கேற்ப குணச்சித்திர நடிகையாக படங்களில் நடித்து வருகிறார். இதைத் தவிர சீரியல்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவருடைய பேட்டியின் போது ஏன் கணவரை விவாகரத்து செய்தீர்கள் என்று கேட்கப்பட்டது, அதற்கு அவர் நான் விவாகரத்து செய்தது தான், நல்லது, அப்படி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், என் குழந்தைகள் இன்று நன்றாக படித்திருக்கமாட்டார்கள்.
ஒரு சினிமா நடிகர் என்றால் உடன் 10, 15 எடுப்புகள் இருக்கும், அவர்கள் சும்மா இருக்கமாட்டார்கள். நீங்கள் நல்லா நடிக்கிறீங்க, பட்டையை கிளப்புறீங்க என்று ஏற்றிவிடுவார்கள். அதுமட்டுமின்றி குழந்தைகளும் செமையா நடிக்கிறாங்க என்று சும்மா ஏத்திவிடுவாங்க. பையனை நடிக்க வச்சுரலாம் என்று பில்டப் பண்ணுவார்கள்.
முதலில் நான் நினைத்தேன் வீடு என்றால் ஒரு வாசப்படி வேண்டும், கணவன் இல்லாத ஒரு வீடு எப்படி இருக்கும், வாசப்படி இல்லாத மொட்ட வீடு மாதிரி இருக்கும். ஆனால் அதன் பின்னர் தான் தெரிந்தது
அந்த வாசப்படி எதற்கு பயன்படுகிறது என்று அதற்காகவே தான் இந்த முடிவு, குறிப்பாக என் குழந்தைகளுக்காகவே தான் இந்த முடிவு, ஏதேனும் ஒன்று இழந்தால் தான் ஒன்று கிடைக்கும், அது போன்று தான் என்று கூறியுள்ளார்.