கண்களுக்கு இடையே வேகமாக வளரும் சிவப்பு கட்டி..! பார்வையே பறிபோகும் ஆபத்து! பரிதவிக்கும் பெண் குழந்தையின் தாய்! என்னாச்சு தெரியுமா?

ஒரு வயது நிரம்பிய அந்த சிறுமியின் பெயர் நூர் நுனெஸ். பிறந்தது முதலாகவே, இரு கண்களுக்கு இடையில் கட்டி வளர்ந்ததால், சிறுமியின் தலைப்பகதியில் ரத்த நாளங்கள் செயல்பட முடியாமல் முடங்கி வருகின்றன. அத்துடன், இரு கண்களுக்கும் இடையில் ரத்த நாளத்தில் ஏற்பட்ட கட்டியானது படிப்படியாக வளர தொடங்கியுள்ளது. இதனால், சிறுமியின் இடது கண் முழுவதுமாக மூடப்பட்டு, பார்வையை இழந்துவிட்டாள், இதேபோல, வலது கண்ணிலும் ஆபத்து நெருங்கிவருகிறது.


இதையடுத்து உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவின் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் கிரிகோரி லெவிட்டினை சிறுமியின் பெற்றோர் தொடர்புகொண்டு உதவி கோரினர். அவரது அறிவுரையின்படி, கடந்த ஜூலை 24ம் தேதி மவுண்ட் சினாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு, இரண்டரை மணிநேரம் போராடி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கட்டி அகற்றப்பட்ட பிறகு லேசர் முறையில் சில சிகிச்சைகளும் தரப்பட்டன. இதன்மூலமாக,

மறுபடியும் அந்த கட்டி ஏற்படாமல் இருக்கும் என்று, டாக்டர்கள் தெரிவித்தனர். சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்பின் பெயர் hemangioma ஆகும். இது உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படும், முதலில் சிறு சிவப்பு நிற புள்ளியாக ஆரம்பிக்கும் இது படிப்படியாக வளர்ந்து பெரிய புற்றுக்கட்டியாக மாறிவிடும். குறிப்பாக, சிறு வயதினருக்கு இந்த பாதிப்பு எளிதில் அதுவும் முகப்பகுதியில் ஏற்பட்டு, பாதிப்பை விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.