மும்பை மாநகரில் மாஹிம் என்ற கடற்கரை அமைந்துள்ளது. 4-ஆம் தேதி மாலை நேரத்தில் கடற்கரையில் மர்மமான முறையில் ஒரு பெட்டி கிடந்துள்ளது. அருகே சென்று பார்த்தபோது ஏதோ ஒரு உடற்பாகம் வெளியே நீட்டிக்கொண்டு இருப்பதை போன்று காட்சியளித்துள்ளது. உடனடியாக பொதுமக்கள் அப்பகுதி காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெட்டியை பரிசோதனை செய்தனர். அந்த பெட்டியில் மனித உடற்பாகங்கள் துண்டு துண்டாக இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடற்பாகங்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உடனடியாக அவர்கள் தங்களுடைய விசாரணையை மேற்கொண்டனர். நபரின் அடையாளம் தெரியாமல் காவல்துறையினர் விசாரணையை மேற்கொள்ள தொடங்கினர். அந்த பெட்டிக்குள் ஒரு ஸ்வெட்டர் கிடந்துள்ளது. ஸ்வெட்டரை அடிப்படையாக கொண்டு தேடியபோது காவல்துறையினருக்கு பென்ட் ரிபெல்லர் என்ற 59 வயது கிட்டார் கலைஞரின் புகைப்படங்கள் கிடைத்துள்ளன. ஃபேஸ்புக்கில் அவர் இதேபோன்று ஸ்வெட்டர் அணிந்து வந்ததை கண்டு காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்றனர்.
அவருடைய வளர்ப்பு மகளான ஆர்த்யாவிடம்(19) காவல்துறையினர் விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. ஆராத்யாவுக்கும், அவருடைய வீட்டிற்கு அருகேயுள்ள ஒரு இளைஞருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை ரிபெல்லர் வன்மையாக கண்டித்துள்ளார். மேலும் அவ்வப்போது ஆரத்தியுடன் தவறாக நடக்க முயன்றார் உடனடியாக ஆராத்யா தன்னுடைய காதலனின் உதவியுடன் வளர்ப்பு தந்தையை தீர்த்துக்கட்டியுள்ளார் பின் பெட்டிகளில் அடைத்து மாஹிம் கடற்கரையில் வீசியுள்ளனர்.