கண்ணை மறைத்த காமம். 3 மாத குழந்தையை கொலை செய்தது ஏன்.? தாயின் வாக்குமூலம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மூன்றுமாத பெண் குழந்தையைக் கொலை செய்து புதருக்குள் வீசிய தாயாரை பொலிசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.கார்த்திக் – வனிதா தம்பதியினருக்கு சசிபிரியா (2) மற்றும் 3 மாதமான கவிஸ்ரீ என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.நேற்று வனிதா தனது 3 மாத குழந்தையை யாரோ கடத்தி சென்றுவிட்டதாக அங்கிருப்பவர்களிடம் கூறி அழுதுள்ளார்.இதுதொடர்பாக பொலிசில் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த பொலிசார், வீட்டின் அருகே குப்பைகளை கொட்டும் குப்பைமேடு என்ற பகுதியில் பிளாஸ்டிக் பைக்குள் வைத்து வீசப்பட்ட குழந்தை கவிஸ்ரீ உடலை மீட்டனர்.

இதில் வனிதாவிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.அதில், வனிதாவுக்கும், பக்கத்து வீட்டில் குடியிருந்து வந்த திருமணம் ஆகாத சீனிவாசனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சீனிவாசனின் பேச்சு வனிதாவை கவர்ந்தது. இதனால் அவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது. கார்த்திக் வேலைக்கு சென்ற பின்னர் வனிதா, சீனிவாசனை தனது வீட்டிற்கு வரவழைத்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.கார்த்திக்கை தனிமையில் சந்திக்க வேண்டுமென்பதால் மூத்த குழந்தையை தனது தாய் வீட்டில் ஒப்படைத்துள்ளார்.

3 மாத குழந்தையை மட்டும் தான் கவனித்துக்கொண்டார். இருப்பினும், இவர்கள் உல்லாசமாக இருக்கும்போது 3 மாத குழந்தையின் அழுகை தொந்தரவை ஏற்படுத்தியுள்ளது, இதனால் இருவரும் ஆத்திரம் அடைந்தனர், காமம் கண்ணை மறைத்தது.

பெற்ற குழந்தை என்றும் பாராமல் கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்து குப்பை தொட்டியில் வீசியதாக தெரிவித்துள்ளார்.தற்போது, வனிதா மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்