கண்பார்வையற்ற மாணவிக்காக தேர்வெழுதிய சினிமா ஹீரோவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இளம் நாயகனாக முன்னேறி வருபவர் தனிஷ். தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பிரபலமானார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவர் நெகட்டிவ் இமேஜில் சிக்கிக் கொண்டார். இதனால் மக்கள் மனதில் அவர் வில்லனாக சித்தரிக்கப்பட்டார். ஹைதராபாத்தில் போதைப் பொருள் சிக்கிய விவகாரத்தில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த 12 சிக்கினர். அதில் ஒருவர் இந்த தனிஷ்.
அந்த நெகட்டிவ் இமேஜையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒரு நற்காரியத்தின் மூலம் மீண்டும் மக்கள் மனதில் ஹீரோவாக போற்றப்படுகிறார். கண்பார்வையற்ற மாணவி தேர்வு எழுத முடியாத நிலையில் உள்ளதால் அந்த மாணவியில் தேர்வுக்கு உதவுமாறு முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது. இதனை பார்த்த நடிகர் தனிஷ் தான் அந்த மாணவிக்காக தேர்வு எழுத முன் வந்தார்.
அதன் படி தெர்வெழுதிக் கொடுத்து மாணவியை வெற்றி பெறச் செய்ததோடு மக்களின் இதயங்களையும் வென்றெடுத்துள்ளார். அந்த மாணவிக்கு பண உதவியையும் அளித்துள்ளார்.
இவர் எற்கனவே போதை பொருள் உபயோகப்படுத்திய விவகாரத்தில் கிசுகிசுக்கப்பட்ட இவர் இதன் மூலம் தனக்கிருந்த நெகட்டிவ் இமேஜை அடித்து நொறுக்கி, உண்மையான ஹீரோவாக ஆந்திராவில் கொண்டாடப்படுகிறார்.