கருணாநிதியின் உடல் உறுப்புகளை இயங்க வைப்பதில் சவால்..!!அடுத்த 24 மணிநேரத்தில்.. கருணாநிதி குறித்து பரபரப்பு அறிக்கை! தமிழகத்தில் பதற்றம்

கருணாநிதியின் உடல்நிலை சவாலான நிலைக்கு சென்றுவிட்டதாகவும், முதுமை காரணமாக உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் சமீபத்திய அறிக்கை வெளியிட்டுள்ளது.திமுக தலைவர் கருணாநிதி, கடந்த மாதம் 28-ம் திகதி நள்ளிரவில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்று பத்தாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கடைசியாக ஜூலை 31-ம் திகதி, காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது கல்லீரல் நோய் தொற்று, தொடர்பாக சில சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், வயது முதிர்வு காரணமாகவும், சில நாட்கள் கருணாநிதி மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்நிலையில் இன்று வெளியான அறிக்கையில், கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், வயோதிகம் காரணமாக முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கருணாநிதிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சைக்கு அவர் உடல்நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை வைத்தே அடுத்தகட்ட சிகிச்சை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் குவிந்து வருவதுடன் “எழுந்து வா தலைவா” என்ற கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை; உடல்நிலையை தொடர் கண்காணிக்க வேண்டியுள்ளது

கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு கருணாநிதியின் உடல்நிலை திடீரென்று பின்னடைவை சந்தித்துள்ளதால், அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக முன்னேறி வருவதாக கூறி அவர் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், கருணாநிதியின் சிறுநீரகப் பாதையின் இரண்டு இடங்களில் அவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது. இதற்காக வழங்கப்பட்டு வந்த ஆன்டி பயாடிக் மருந்துகளை ஓரளவுக்குத்தான் அவரது உடல் ஏற்றுக் கொண்டது.

பெரிதாக எந்த ஒரு முன்னேற்றத்தையும் அளிக்கவில்லை. ரத்த அழுத்தத்திலும் அவ்வப்போது குறைபாடு நிலவுகிறது. தற்போது மஞ்சள்காமாலையும் பாதிப்பும் வந்துவிட்டது.இதற்கு காரணம் சிறுநீரகத் தொற்று முழுமையாக மருத்துவக் கட்டுப்பாட்டுக்குள் வராததுதான். சிறுநீரகத் தொற்றின் காரணமாக ரத்தத்தில் கிருமி கலந்துவிட்டது.

மருந்தின் உதவியில்லாமல் சீரான நிலையில் அவரை வைக்க முடியவில்லை. அதேநேரம், மருந்து கொடுத்தும்கூட கடந்த சனிக்கிழமை இரவு கடும் பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து அழகிரியின் ஆதரவாளர், கருணாநிதியின் கழுத்துப் பகுதியில் டிரக்கியாஸ்டமி பொருத்தப்பட்டுள்ளதால், சுவாசத்தில் சிக்கல் ஏற்படும்போது மட்டும் செயற்கை சுவாசம் தரப்படுகிறது.

மற்ற நேரங்களில் இயல்பாகவே சுவாசித்து வருகிறார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் நிலையிலும் அவர் இல்லை.இந்தப் பின்னடைவை சரி செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என கூறியுள்ளார்.