கருணாநிதியின் தற்போதைய நிலை என்ன? வெளியான அஞ்சலி போஸ்டர்களால் பரபரப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து இன்று எந்த ஒரு அறிக்கையும் வெளியாகவில்லை. இன்று மாலை 5 மணிக்கு மேல் அறிக்கை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஸ்டாலின் தி.மு.க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு இதய அஞ்சலி போஸ்டர்கள் அச்சடிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி இருப்பதால் தொண்டர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 11 தினங்களாக கலைஞர் கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார்.நேற்று கருணாநிதியின் உடல்நிலை மிகவும் பின்னடைவை சந்தித்ததாக அறிக்கை வெளியாகியது.

இந்நிலையில் இன்று காலை மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் எந்த ஒரு அறிக்கையும் வெளியாகவில்லை. இதையடுத்து தற்போது தலைவர் கருணாநிதி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி, இதய அஞ்சலி போஸ்டர் அச்சடிக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால், இது உண்மையாக இருக்குமோ என்ற அச்சமும் திமுக தொண்டர்களிடயே நிலவியுள்ளதால், அவர்கள் அனைவரும் மருத்துவ அறிக்கையையே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்