கருணாநிதியின் பதிலை கேட்டு அதிர்ந்து போன மருத்துவர்..! என்ன சொன்னார் தெரியுமா.

தமிழக அரசியல் வரலாற்றை எழுதும் போது தவிர்க்க முடியாத பெயர் கலைஞர் கருணாநிதி.அவர்கள் தமிழக அரசியலில் ஒரு நீங்க இடம் பிடித்தவர். பெயர் மட்டுமல்ல இவரின் செயல்பாடுகளும் சாதனைகளும் அரசியலில் அடியெடுத்து வைப்பவர்களுக்கு இன்றளவும் ஏதோரு வகையில் பாடமாகவே இருக்கிறது.

திமுக தலைவராக ஐம்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள கலைஞர் அவரகள் ஒரு சிறந்த அரசியல்வாதி மட்டுமல்லாமல் சிறந்த இலக்கியவாதியான கருணாநிதி மேடைகளில் பேசும்போது அவரது தொடர்பேச்சுக்கள் கேட்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.

அந்த அளவுக்கு வாக்கியங்களை வேகமாகவும், அதே நேரத்தில் தெளிவாகவும் பேசி கூட்டத்தில் இருப்பவர்களின் சிந்தனை சிதறவிடாமல் பார்த்துக்கொள்வார்.மேலும், சிறந்த நகைச்சுவை உணர்வாளரும் கூட.

எதிலும் நகைச்சுவையாக உரையாடும் கருணாநிதி ஒருமுறை சிகிச்சைக்கு சென்றபோது மருத்துவரிடம் அளித்த சுவாரசியமான பதில் இதோமருத்துவமனையில் மருத்துவரும், கலைஞரும் பேசிக்கொள்கின்றனர்.

மருத்துவர்: மூச்சை நன்றாக இழுங்கள்.

கலைஞர்: ம்ம்ம்… (மூச்சை இழுக்கிறார்)

மருத்துவர்: மூச்சை விடுங்க

கலைஞர்: (சிரித்துக் கொண்டே கலைஞர் சொன்னார்) மூச்சை விடக்கூடாதுனுதான் டாக்டர் நான் ஹாஸ்பிடலுக்கே வந்திருக்கிறேன் என்று சொல்லி சிரித்தாராம் …மருத்துவர் என்ன சொல்வதென்று தெரியாமல் வாயடைத்துப்போனார்.