திமுக தலைவர் கலைஞரின் உடலை சந்தனப்பேழைக்குள் வைத்தவுடன் குடும்பத்தினர் ஒவ்வொருவராக இறுதி அஞ்சலி செலுத்தினர்.அப்போது, கருணாநிதியின் பேரனும், கனிமொழியின் மகனுமான ஆதித்யா, அஞ்சலி செலுத்த வருகையில் தனது தாத்தாவின் சட்டையில் பேனா இல்லாததை பார்த்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் பேனாவை வாங்கியுள்ளார்.
மேலும் இந்த பேனாவை நான் உங்களிடம் கொடுக்க மாட்டேன், என் தாத்தாவை வைத்துள்ள பேழைக்குள் இந்த பேனாவை வைக்கப்போகிறேன் என கூறியுள்ளான்.அந்த அதிகாரியும் சந்தோஷம் அடைந்து, இதை விட பேறு பாக்கியம் எனக்கு கிடைக்காது என கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, ஆதித்யான தனது தாத்தாவின் சட்டையில் அந்த பேனாவை வைத்துள்ளார். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை நெகிழ்ச்சியடையை செய்தது.
கலைஞரின் சட்டைப் பையில் எப்போதும் ஒட்டிக் கிடப்பது அவர் வழக்கமாகப் பயன்படுத்தும் வேலிட்டி ஏர்மெயில் பேனா மட்டும் தான். பேனா இல்லாமல் எப்போதும் கலைஞர் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.