கர்பமாக இருக்கும் நேரத்தில் நடிகர் ரம்பா செய்த வேலையை பாருங்க வைரலாகும் புகைப்படம்

நடிகை ரம்பா, 1993-ஆம் ஆண்டு உழவன் படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா உள்ளிட்ட பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து புகழ்பெற்றார்

இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்க போட்டார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர், இடையில் கணவருடன் பிரச்சனை ஏற்பட்டதால் 2016ஆம் ஆண்டு விவாகரத்துக்கு பதிவுசெய்தனர்.

பின் சில சுமுக பேச்சு வார்த்தை தொடர்ந்து மீண்டும் தன் கணவருடன் இணைந்துவிட்டார்.இதைத்தொடர்ந்து ரம்பா 3வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வந்தன, அவரும் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியேட்டர்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் தன்னுடைய குழுவுடன் US மற்றும் கனடாவில் கலை நிகழ்ச்சிகள் செய்து வருகிறார். அவர்கள் கனடா வந்துள்ளனர் என்பதை அறிந்த ரம்பா, சல்மான் கான் மற்றும் அவரது குழுவினரை சந்திக்க நேரில் சென்றுள்ளார்.

நீண்டநாட்களுக்கு பிறகு மீண்டும் கர்ப்பமாக இருக்கும்வேளையிலும் நீண்ட தூரம் பயணம் செய்து சல்மான் கான் சோனாக்ஷி, ஜாக்குலின், பிரபு தேவா போன்றோர்களுடன் புகைப்படமும் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.