பிரிட்டனைச் சேர்ந்த இளம் பெண் தொடர்ந்து வயிறு வீங்கிக் கொண்ட இருந்ததால், கர்ப்பமாக இருப்பதாக நினைத்த நிலையில் அது கருப்பை புற்றுநோய் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். கடந்த 2017-ஆன் ஆண்டு டிசம்பரில் அபி கிறிஸ்வெல் (21) என்ற இளம் பெண்ணின் வயிறு வீங்க தொடங்கியுள்ளது. அதன் பின் தொடர்ந்து அடிக்கடி வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரின் குடும்பத்தினர், வயிற்று வலி மற்றும் வீங்கிக் கொண்டே சென்றதால், கர்ப்பமாக இருக்கலாம் என்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நினைத்துள்ளனர். பின்னர் இதை உறுதி செய்வதற்கு மருத்துவர்களிடம் சென்றபோது அவர்களுக்கும் அபி கர்ப்பமாக இருக்க தான் வாய்ப்பு அதிகம் என தொடர்ந்து அதற்கான பரிசோதனையை செய்து வந்தனர்.
ஆனால் அபி தொடர்ந்து தாங்க முடியாத வயிற்று வலியால் அவதிப்பட்டார். இப்படியே 6 மாதம் வரை சென்ற நிலையில் இனியும் வலியை பொறுக்க முடியாது என அபி வேறு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அபிக்கு பல்வேறு விதமான பரிசோதனைகளுடன், நிறைய ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர், காரணம் அபிக்கு கருப்பை புற்றுநோய் இருப்பதும், அவர் வயிற்றில் 2.2 கிலோ எடையுடைய புற்றுநோய் கட்டி இருப்பதும் தெரியவந்தது.
இந்த கட்டி தான் அவரின் வயிற்றை வீங்க வைத்து கர்ப்பிணி போல வெளியில் காட்டியுள்ளது. இதற்கான சிகிச்சையை தொடர்ந்து அபி எடுத்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் வயிற்றில் இருந்த கட்டி முழுவதுமாக அகற்றப்பட்டது. இதன் பின்னர் தொடர் சிகிச்சையால் அபி புற்றுநோயிலிருந்து தற்போது மீண்டுள்ளார். இது குறித்து அபி கூறுகையில், எல்லோரும் என் வயிறு வீங்கியதை பார்த்து நான் கர்ப்பமாக இருப்பதாக நினைத்தார்கள்,
ஆனால் எனக்கு மட்டும் வேறு எதோ பிரச்சனை உள்ளது என்றே தோன்றியது. அதற்கேற்றார் போலவே பெரிய கட்டி வயிற்றில் இருப்பது தெரியவந்தது. கட்டியை வெளியில் எடுத்த போது அது பெரிய உருண்டை அளவில் இருந்தது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.