கோவை மாவட்டத்திலுள்ள சரணவம்பட்டியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (23). திருமணமாகாதவர். இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் அலுவலக பணியாளராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், இக்கல்லூரியின் தாளாளர் சுப்பிரமணியம் (64) கல்லூரியில் பணிபுரியும் இளம்பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். தனியாக அறைக்கு வரும் இளம்பெண்களின் பின்னால் சென்று கட்டி அணைப்பது, போன்ற சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அங்கு பணிபுரிந்த பல பெண்களிடம் பாலியல் ரீதியாக பல்வேறு தொல்லைகளை செய்து வந்துள்ளார். தங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, புகார் ஏதும் தெரிவிக்காமல் பணிக்கு வரும் இளம் பெண்கள் பலர் இவரது பாலியல் தொந்தரவு பொறுக்க முடியாமல் வேலையை விட்டு சென்றுள்ளனர்.மேலும், அங்கு பணிபுரிந்து வந்த புவனேஸ்வரிக்கு பலமுறை பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்துள்ளார் சுப்பிரமணியம்.
இதுகுறித்து, கல்லூரியின் தலைமை நிர்வாகி நளனிடம் கூறியபோது, வெளிநாட்டில் பெண்களை கட்டிப்பிடிப்பது… முத்தம் கொடுப்பது மிகப்பெரிய விஷயம் அல்ல. அதனால் போய் வேலையைப் பாருங்கள் இல்லையென்றால் வேலையை விட்டு தூக்கி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட புவனேஸ்வரி தனது நண்பர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதுள்ளார். நண்பர்களின் அறிவுரைப்படி சுப்பிரமணியத்தின் பாலியல் தொந்தரவுகளை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு ரகசிய கேமராக்கள் மூலம் அவரது சில்மிஷங்களை பதிவு செய்துள்ளார்.இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்