கல்லூரி மாணவியை கீழேதள்ளிவிட்டு உயிரை பறித்த பயிற்சியாளர்..!! மனதை பதறவைக்கும் வீடியோ

தேசிய பேரிடர் மீட்பு மேலாண்மை பயிற்சியின் போது 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் பயிற்சியாளரின் அலட்சியத்தில் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இதுதொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது

கோவை மாவட்டத்திலுள்ள உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாவது மாடியில் இருந்து குதிப்பது எப்படி என்ற பயிற்சியை லோகண்யா என்ற 19 வயது கல்லூரி மாணவிக்கு பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் பயிற்சி அளித்தார்.

கீழே மாணவர்கள் வலையுடன் தயார் நிலையில் இருந்தபோது பயிற்சியாளர் மாணவியை கீழே தள்ளிவிட்டார். ஆனால் எதிர்பாராத வகையில் முதல் மடியின் மீது மோதி விழுந்த லோகண்யா தலையில் பலமான காயமேற்பட்டு சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.

இதுதொடர்பாக, கவனக்குறைவாக பயிற்சி அளித்த பயிற்சியாளர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனைவியை பாதுகாக்கும் வகையில் கயிறு கட்டாமல் அலட்சியமாக பயிற்சியாளர் செயல்பட்டதால் தான் லோகேஸ்வரி உயிரிழந்ததாக புகார் செய்யப்பட்டது. இதன் காரணமாக பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டார்.மாணவி பயிற்சியின் பொது எடுத்த வீடியோ