கள்ளகாதலனின் வெறிச்செயாலால் அரங்கேறிய விபரீதம்..!! நர்சு கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்

வேலூர் மாவட்டத்திலுள்ள சதுப்பேரியில் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அந்த சடலத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அந்த பெண்ணின் வாயில் ரத்தம் வழிந்திருந்தது, முகத்திலும் சிறு சிறு காயங்கள் காணப்பட்டன. பெண்ணின் சடலம் பிணக்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காவல்துறையினர் மாயமான பெண்களின் புகைப்படங்களை ஒப்பிட்டு விசாரித்து வந்த நிலையில் சடலமாக மீட்கபட்டவர், கீழ் பொண்ணாமூரை சேர்ந்த அனிதா என்பதும், அவர் வேலூர் சி.எம்.சி மருத்துவ மனையில் நர்சாக பணிபுரிந்து வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. அவருக்கு திருமணமாகி, 10 வருடங்கள் கடந்த நிலையில், இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அண்மையில், அஜீத்குமார் என்ற இளைஞருடன் அவர் நட்பாக பழகி உள்ளார்.

அது காதலாக மாறியதால் குடும்பத்தில் பிரச்சினை உருவாகி உள்ளது.இந்த நிலையில் கணவர் கடுமையாக கண்டித்ததால், ஆண் நண்பர் அஜீத்குமாருடன் பேசுவதை அனிதா நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. அவரது செல்போன் அழைப்பையும் எடுக்காமல் அனிதா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அஜீத்குமார், அனிதாவின் வீட்டுகே சென்று தன்னிடம் பேசாமல் இருப்பது ஏன் ? என கேட்டு தகராறு செய்துள்ளார். மேலும், தனியாக பேச வேண்டும் என்று கூறி அனிதாவை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.

அதன் பின்னர் வீடு திரும்பாத நிலையில் அனிதாவை , அவரது கள்ளக்காதல் அஜீத்குமார் கொலை செய்து ஏரியில் வீசியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது, இதைத்தொடர்ந்து தலைமறைவாகியுள்ள அஜீத்குமாரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

தாலி கட்டிய கணவனையும், அன்பான குழந்தைகளையும் மறந்து, ஆண் நண்பர்களிடம் நெருங்கினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்