கள்ளக் காதலனுடன் இருந்த தங்கை.! நேரில் பார்த்த சகோதரன் செய்த தரமான சம்பவம்

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மணிமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. அவரது மனைவி வனிதா இவர்களுக்கு ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பாலாஜியின் உறவினரான கணபதி என்பவர் அவ்வப்போது அவர்களது வீட்டுக்கு வந்து சென்றதாகவும், அப்போது வனிதாவுக்கும் பாலாஜிக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த பாலாஜி வனிதாவைக் கண்டித்தார். ஆனால் கள்ளக்காதல் கண்ணை மறைக்க வனிதா தனது கணவனை பொருட்படுத்தாம கணபதியுடன் உல்லாசமாக சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வனிதா தனது கணவனையும்.

ஒன்றரைவயதுக் குழந்தையையும் அம்போவென விட்டுவிட்டு திடீரென மாயமானார். ஒன்றரை வயது மகனுடன் தனியாக தவித்த பாலாஜி மனைவியைத் தேடத் தொடங்கினார். தெரிந்தவர்களிடம் விசாரித்த போது வனிதா கள்ளக்காதலன் கணபதியுடன் ஓட்டம் பிடித்ததும், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த குண்டு பெரும்பேடு என்ற இடத்தில் வாடகை வீட்டில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பாலாஜி அவர்களை தீர்த்துக் கட்ட திட்டமிட்டார். குண்டு பெரும்பேட்டில் வனிதா கள்ளக்காதலனுடன் வசித்த வீட்டுக்கு வனிதாவின் சகோதரருடன் அதிகாலை நேரத்தில் பாலாஜி சென்றுள்ளார். அவர்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கணபதியும் வனிதாவும் தப்பி ஓட முயன்றனர்.

ஆனால் கணபதியை சுற்றி வளைத்த பாலாஜி மற்றும் வனிதாவின் சகோதரர் உள்ளிட்டோர் அரிவாள்களால் சரமாரியாக வெட்டினர். தடுக்க முயன்ற வனிதாவுக்கும் வெட்டு விழுந்தது. இதனைத் தொடர்ந்து கொலைக் கும்பல் தப்பியோடியது தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த கணபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த வனிதா கவலைக்கிடமான நிலையில் அக்கம்பக்கத்தினரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் பாலாஜி மற்றும் வனிதாவின் தம்பி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.