புருஷனுக்கு தெரியாமல் கள்ள தொடர்பு வச்சிக்கோ, அப்போ தான் நிம்மதியா இருக்க முடியும் என சின்மயிக்கு மருத்துவர் ஒருவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சின்மயி டுவீட் : தமிழ் சினிமாவிலும் சமூகத்திலும் பெண்களுக்கு நடந்து வரும் பாலியல் தொல்லைகளை குறித்து ட்வீட் செய்து தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் சின்மயி.
இவரின் மூலமாக தான் தமிழகத்தில் மீ டூ என்ற ஹேஸ்டேக் தமிழ் சினிமாவில் பிரபலமானது.
அடிக்கடி எதையாவது பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் இவர் மருத்துவர் கள்ள தொடர்பு வைத்து கொள்ளுமாறு கூறிய அறிவுரை பற்றியும் பகிர்ந்துள்ளார்.
நான் ஒரு மனநல மருத்துவரை சந்தித்தேன். அவர் என்னுடைய தனிப்பட்ட விசயங்களை பற்றிய கேட்டார். அவை மருத்துவ சிகிச்சைக்கு தான் எனவும் கூறினார்.
எனவே நானும் கூறினேன். அதன் பின்னர் அந்தரங்களை பற்றி விசாரித்தார். அதையும் கூறினேன்.
இவையெல்லாம் கேட்ட அந்த பெண் டாக்டர் கள்ள தொடர்பு வச்சிக்கோ நிம்மதியா இருக்கும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவரது ஆலோசனையை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவியேற்றியுள்ளார் சின்மயி.