காதலனுடன் ஓடி போக முயன்ற காதலி..!! வாகன சோதனையில் காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி

குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் அந்த வழியாக வந்தனர்.போலீசார் அவர்களை விசாரணை செய்ததில், மூவரும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதில் இருவர் காதலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த காதலுக்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து அவரை பூந்தமல்லியில் உள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொண்டு வந்து விட்டுச் சென்றனர். இந்நிலையில் நேற்று காலை காதலன் ஹரிஹரன் , காதலியின் கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தன்னுடன் வரும்படி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து காதலனை தொடர்பு கொண்ட அந்தப் பெண், சென்னைக்கு வந்து தன்னை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

அதன்பேரில் இன்று அதிகாலை பூந்தமல்லியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து வெளியேறி புதுச்சேரி செல்ல இருந்ததாக காதலர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். சந்தேகத்தின் பேரில் ஹரிஹரனிடம் நடத்திய விசாரணையில் அவன், வில்லியனூர் பகுதியில் செல்போன் திருட்டு மற்றும் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தொடர்புடையவன் என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து பெண்ணின் பெற்றோரை மெரினா காவல்நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் இளம்பெண்ணை அனுப்பி வைத்தனர். ஹரிஹரனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்