திருமணம் செய்துக் கொள்ளும்படி நச்சரித்த காதலியை கொலை செய்து சூட்கேசில் உடலை மறைத்து கடத்த முயன்ற இளைஞரை போலீசார் ஹைதராபாதில் கைது செய்துள்ளனர். லாவண்யா என்ற மென்பொருள் நிறுவன ஊழியரை கடந்த சில நாட்களாக காணவில்லை என்று அவர் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் இறங்கிய போலீசார் சுனில்குமார் என்ற காதலனைப்பிடித்தனர். லாவண்யாவை ஓட்டல் அறைக்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் உடலை
சூட்கேசில் அடைத்து சாக்கடையில் வீசி எறிந்ததாகவும் சுனில்குமார் தெரிவித்தான். இதனையடுத்து அவன் காட்டிய பகுதியில் சூட்கேசை மீட்ட போலீசார் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர். இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்