சுசீந்திரம் அருகே மணிக்கட்டிபொட்டல் என்னும் இடத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகனின் பெயர் செல்வகுமார். செல்வகுமாரின் வயது 21. இவர் ஒரு பட்டதாரி ஆவார். தான் பயின்ற கல்லூரியிலேயே படித்து வந்த வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். திடீரென்று இருவரும் மோதி கொண்டுள்ளனர். இதனால் செல்வகுமார் மனமுடைந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். உடனடியாக அப்பகுதி காவல்நிலையத்தில் செல்வகுமாரின் பெற்றோர் தகவல் தெரிவித்தனர்.
சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், செல்வகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. செல்வகுமார் காதலித்து வந்த பெண் அவரை திருமணம் செய்துகொள்ளுமாறு பலமுறை செல்வகுமாரை வற்புறுத்தியுள்ளார். ஆனால் செல்வகுமார்
தனக்கு நல்ல வேலை கிடைத்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்பது போன்று கூறியுள்ளார். செல்வகுமார் செல்போனை பரிசோதித்து பார்த்தபோது அதில் அவருடைய காதலி நிறைய எஸ்எம்எஸ்கள் அனுப்பியிருந்தார். செல்வகுமார் உயிரிழந்தது தெரியாமல் மேலும் நிறைய மெசேஜ்களை அனுப்பினார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர் இந்த சம்பவமானது சுசீந்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது