காதலர் தின நடிகையா இது..?? ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய புகைப்படம் உள்ளெ..!!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘பம்பாய்’ படத்தில் ‘ஹம்ம ஹம்மா’ என்ற பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையானவர் சோனாலி பிந்த்ரே. சமீபத்தில் இவர் புற்று நோயால் பாதிக்கப்ட்டுள்ளார் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.இந்தி நடிகையான இவர் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் குணால் நடித்த ‘காதலர் தினம்’ நடிகர் அர்ஜுன் நடித்த ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் தனக்கு புற்றுநோய் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சோனாலி தெரிவித்திருந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.தற்போது நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை சோனாளி கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வருகிறார்.

 

தனக்கு புற்று நோய் இருப்பதை அறிந்த நண்பர்களும் உறவினர்களும் அடிக்கடி தமக்கு போன் செய்து நலம் விசாரித்து தனக்கு ஆறுதலாக இருந்து வருவதாக கூறி சமீபத்தில் தன்து ட்விட்டர் பக்கத்தில் நேற்று நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகை சோனாலி.

மேலும், அந்த பதிவில் தனது தோழிகளுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

அதற்கு காரணம் தற்போது புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவருவதால் தனது தலை முடியை மொட்டையடித்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.வைரலாகிவற்றும் அந்த புகைப்படம் இதோ