காதலிக்கு பரிசு கொடுக்க நினைத்த காதலனுக்கு ஏற்பட்ட விபரீதம்! என்ன நடந்தது தெரியுமா???

வெளிநாட்டை சேர்ந்த  ஒருவர் தனது காதலிக்காக பரிசு ஒன்றை கொடுக்க நினைத்துள்ளார். அதுவும் மரத்தினால் ஆன பொருளை தானெ செய்து கொடுக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். இதனால், மரத்தினால் ஆன பொம்மை ஒன்றை செய்ய ஆரம்பித்துள்ளார். அந்த பொம்மையும் மிக அழகாக வந்துள்ளது. இந்த பொம்மையை முழுவதுமாக செய்து முடிக்கும் நிலையில் இருந்த நேரத்தில், எதிர்பாராதவிதமாக அவரது கட்டை விரல் துண்டாகியுள்ளது.

இந்த சோகமான சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த நிலையில், தற்போது ஐடெனுக்கு அறுவை சிகிச்சை மூலம் மற்றொரு கட்டை விரல் பொருத்தப்பட்டுள்ளது.சிகிச்சைக்கு செல்வதற்கு முன்னதாக 4 மாதங்கள் கட்டைவிரல் இல்லாமல் இருந்த சமயத்தில்., தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் கட்டை விரலை கொண்டு பழைய நிலையில் இயன்றளவு பணியை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்த தகவலை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்து., அனைத்தும் எனது காதலுக்காக என்று தெரிவித்துள்ளார்.. இவரது காதல் அன்பிற்க்காக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.இந்த சம்பவம் உண்மை காதலுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று தான் சொல்ல வேண்டும்.