காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யாவை கட்டிப்பிடித்து மன்னித்த தாடிபாலாஜி.. புகைப்படம் உள்ளே

கடந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டி, பொறாமை, சண்டை என்று ஒரே எதிர்ப்பார்ப்புகளுடன் பிக்பாஸ் இல்லம் காணப்பட்டது.மக்கள் புரட்சி’யின் மூலம்தான் கொடுங்கோல் ஆட்சியை அகற்ற முடியும்’ என்கிற செய்தியை இவ்வுலகிற்கு உணர்த்த யாம் ஆடிய நாடகம் இது’ என்கிற ‘திருவிளையாடல்’ வியாக்கியானத்துடன் ‘ராணி மகாராணி’ டாஸ்க்கை முடித்து வைத்தார், பிக் பாஸ். இதற்கு இத்தனை கலாட்டா! இணையத்தில் இத்தனை குடுமிப்பிடி சண்டைகள்! (ஷாரிக் பையன் பாவம் இல்லே… பாவம் நாம்தான்!).

‘தனது கதாபாத்திரத்தை’ சிறப்பாக செய்த ஐஸ்வர்யாவை பாராட்டினார், பிக்பாஸ். போலவே ஆலோசகர், பாதுகாவலர், பொதுமக்கள் என்று அனைவரையும் பாராட்டினார். உடை மாற்றி வந்து அமர்ந்தவரைப் பார்க்க ‘புது’ ஐஸ்வர்யா போல இருந்தது. இந்த நான்கு நாட்களுக்குள் என்னவெல்லாம் செய்துவிட்டது,இந்தப் பெண்? மறக்க முடியாத பெர்ஃபாமன்ஸ். ஆனால் இன்னுமும் ‘கலங்கிய’ மனோநிலையிலேயே இருந்தார் ஐஸ்வர்யா.

நேற்றைய தினம் கமல் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார்.இதன்போது, பாலாஜி மீது குப்பை கொட்டிய விவகாரம் பெரும் விவாதங்களுடன் தீர்ந்தது. இந்நிலையில்,

இன்று ஐஸ்வர்யா தாடிபாலாஜியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். தாடிபாலாஜியும் இனி உனக்கு நான் ஒரு உறவினர் என்று கட்டிப்பிடித்து அவரை மன்னித்து ஏற்று கொண்டதுடன், பாலாஜியும் இதன்போது நடந்த தவறுக்காக மன்னிப்பு கோரினார்.