கிணற்றில் உயிருக்கு போராடிய மயில்! அருகே சென்ற பாம்பு! உயிரை துச்சமென நினைத்து இளைஞர் செய்த செயல்! மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ

திருச்சி அருகே, கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மயிலை இளைஞர் ஒருவர் தனது உயிரை பனைய வைத்து மீட்ட நபருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கிராமத்தில் மயில் ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அந்த கிணற்றுக்குள் அதிக அளவில் தண்ணீர் இருந்ததால் வெளியே வர முடியால் மயில் உயிருக்கு போராடியுள்ளது.   மயில் ஆபத்தில் உள்ளதை கண்ட, அப்பகுதி இருந்த இளைஞர்கள் மயிலை மீட்க முயன்றுள்ளானர்.

இந்த முயற்சியில் அந்த இளைஞர்களின் ஒருவன் தனது உடம்பில் நாலாபுறமும் கயிறு கட்டி கொண்டு கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். கிணற்றுக்குள் இறங்கிய இளைஞனுக்கு அதிர்ச்சி காத்து கொண்டு இருந்தது. அது என்னவென்றால்,அந்த கிணற்றில் பாம்பு ஒன்று மிதந்து சென்றுள்ளது. பாம்பை கூட பொருட்டு படுத்தமால் தனது உயிரை பணயம் வைத்து அந்த இளைஞர் கிணற்றுக்குள் இறங்கினார். மேலும் சுவர் ஓரமாக ஒதுங்கி இருந்த மயிலை மீட்டு, மேலே உள்ளவர்களிடம் அதை தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் கயிறை மேலே இழுத்துள்ளனர்.

பின்னர் பத்திரமாக மயில் மேலே கொண்டுவரப்பட்டு மயிலின் உயிரை காபாற்றி வனப்பகுதியில் விடப்பட்டது. மயிலை மிகவும் துணிச்சலுடன் காபாற்றிய இளைஞர்களின் இந்த செயல் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.