கிணற்றுக்குள் சிக்கித் தவிப்பு! உள்ளே இறங்கி மீட்க முயன்றவர் உடலை சுற்றிய மலைப்பாம்பு! பிறகு நேர்ந்த விபரீதம்! பதை பதைக்க வைக்கும் வீடியோ உள்ளே!

பெராமங்கலம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் மலைப்பாம்பு இருப்பதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தந்தனர். இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்றனர். சிறிய வட்ட அளவிலான கிணறு என்பதால் எப்படி இறங்குவது, உள்ளே விஷ வாயு ஏதாவது கசிந்து இருக்குமா? பாம்பை மீட்கும்போது அது நம்மை தாக்குமா என்றெல்லாம் யோசித்தனர். பின்னர் வனத்துறை ஊழியர் சாகில் என்பவர் கிணற்றுக்குள் தைரியமாக இறங்க ஒப்பக்கொண்டார்.

பின்னர் கிணற்றுக்குள் இறங்கி பாம்பை மீட்க முயற்சி செய்தார். ஒருவழியாக பாம்பைப் பிடித்துக் கொண்டு, மேலே ஏற முயற்சித்தபோது தன்னை காப்பற்றத்தான் வருகிறார் என்பதை புரிந்துகொள்ளாத பாம்பு, ஏதோ ஆபத்து இருப்பதாக கருதி, அவருடைய உடலை சுற்றி வளைக்கத் தொடங்கியுள்ளது. ஆனாலும் பாம்பை பிடித்துக்கொண்டே அவர் கயிற்றைப் பிடித்து மேலே ஏற முயற்சித்தார். ஆனால் அப்போது அவர் திடீரென பாம்புடன் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதையடுத்து நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு பாம்பு பிடிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளது.

கன்னி வைத்துதான் பாம்பை பிடிக்க முயற்சித்ததாகவும், கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கி பாம்பைப் பிடிக்க முயற்சித்ததாகவும், வனத்துறை ஊழியர் சாகில் தெரிவித்தார். சாகில் கிணற்றுக்குள் இறங்கி மலைப்பாம்பை பிடிக்க முயற்சிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது