கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு. எந்த ராசிகாரர்களுக்கு என்ன அதிர்ஷடத்தை அள்ளித் தரப்போகிறார் கிருஷ்ணர் என்பதை பாருங்கள்..!

கிருஷ்ண ஜெயந்தி என்பது கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும்.மஹாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.நாம் என்னவாக இருக்கிறோமோ அதன் படியே நமக்கு காட்சி தருபவர்தான் கிருஷ்ணர். பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடந்த போது அவருக்கும் ஒரு தரிசனம் கொடுக்கிறார். ஆனால் முழு ஆயுதபாணியாகக் காட்சி தருகிறார். ஏனெனில் பீஷ்மர் ஒரு போர் வீரர். அவருக்குப் போர் வீரராகவே காட்சியளிக்கிறார்.

இந்துக் கடவுளர்களில் பக்தர்கள் மனத்தில் தனது தீராத விளையாட்டுத் தனத்தினால் அதிகம் குடிகொண்டிருப்பவர் கிருஷ்ண பகவான்தான்.நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

சிம்மம்

கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணங்களின் மூலமாக, அனுகூலங்கள் உண்டாகும். பொருள் சேர்ப்பதற்கான அறிவும் ஆற்றலும் மேம்படும். பழைய கடன்களைத் திருப்பித் தருவதற்கான சூழல்கள் உருவாகும். தன வரவு பெருகும். சுயதொழில் செய்வதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

மேஷம்


குடும்பத்துக்குள் மிகவும் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களுடைய வாக்கு வன்மையினால் தொழிலில் பெரும் லாபம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் மூலமாக சாதகமான சூழல்களே உருவாகும். உங்களுடைய செயல்பாடுகளில் இயல்பாகவே வேகம் அதிகரிக்கும். பொருள் சேர்க்கையும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

கடகம்


வீட்டில் மனைவியினுடைய தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றி வைப்பீர்கள். உங்களுடைய எண்ணங்களில் புதுவிதமான மாற்றங்கள் உண்டாகும். புதிதாக வேலை தேடுகின்றவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் கைக்கு வந்து சேரும். பொது சேவைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு புகழ் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் மூலமாக, மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.

ரிஷபம்


உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கான பொறுப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். உங்களுடைய உறவினர்களின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் உண்டாகும். சுய தொழில் மேற்கொள்கின்றவர்களுக்கு கூடுதலான பணிச்சுமை உண்டாகும். நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்ச்சியாக இருப்பார்கள். எதிர் பாலினத்தவர்களின் மூலமான உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம்அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

மிதுனம்


தொழில் சம்பந்தப்பட்ட புதிய முயற்சிகளில் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உங்களுடைய தொழிலுக்கு உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகளின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். உறவினர்களின் மூலம் பெரும் ஆதாயத்தை அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி
வேலை சம்பந்தப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருந்தால் அது சம்பந்தப்பட்ட கோப்புகளை பத்திரமாக கையாளுங்கள். வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். வீட்டிற்காக புதிய பொருள்களை வாங்கிக் குவிப்பீர்கள். சின்ன சின்ன தடைகளையும் களைந்து வெற்றி நடை போடுவீர்கள். சின்ன சின்ன பயணங்களின் மூலமாக, உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். திருமணம் குறித்த பேச்சு வார்த்தைகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

துலாம்


பங்குச் சந்தை சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்கள் புதிய முதலீடுகளை போடுவதற்கு முன் கொஞ்சம் கவனமாக இருங்கள். நண்பர்களின் மூலமாக உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். சக பணியாளர்களின் மூலமாக உங்களுக்கு ஆதரவுகள் உண்டாகும். நீங்கள் எதிர்பாராத தன வரவுகள் பெருகும். தொழிலில் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இனறு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்


உடல் ஆரோக்கிய விஷயத்தில் கொஞ்சம் முன்னேற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களிடம் உள்ள பகைமையை மறந்து நட்பு ஏற்படும். தொழில் சம்பந்தமான போட்டிகளை சமாளித்து வெற்றி அடைவீர்கள். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். சொகுசு வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென் கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

தனுசு


வீட்டில் உள்ள பிள்ளைகளிடம் கொஞ்சம் அனுசரித்துப் போவது நல்லது. புதிய யுக்திகளைத் தொழிலில் கற்றுக கொள்வீர்கள். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்கள் கைக்கு வந்து சேரும். பணியில் நிலுவையில் வைத்திருந்த பணிகளை முழுவதுமாக செய்து முடிப்பீர்கள். விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தாய்வழி உறவினர்களிடம் கொஞ்சம் நிதானமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மகரம்


நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உள்ளவர்களுக்கு சுமூகமான முடிவுகள் உண்டாகும். வீட்டுக்கு பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். பெற்றோர்களுடைய ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் பாராட்டுக்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கும்பம்


நண்பர்களுடன் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பிறருக்கு செய்த உதவியினால் உங்களுக்கு மேன்மை உண்டாகும். உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பெரியோர்களுடைய ஆலோசனையினால் தெளிவு பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. சக ஊழியர்களால் உங்களுககு பணிகளில் சில சில தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மீனம்


வீட்டில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே விவாதங்கள் தோன்றி மறையும். நீங்கள் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் பல இன்னல்கள் தோன்றி மறையும். நண்பர்கள் மூலமாக தொழிலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். பிரபலமானவர்களுடைய நட்பு கிடைக்கும். அதன்மூலம் புதிய வாய்பபுகளைத் தேடிக் கொள்வீர்கள். பயணங்களால் ஆதாயங்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.