
ஷாருக்கான்’ என்றும் ‘எஸ்.ஆர்.கே’ (SRK) என்றும் எல்லோராலும் அழைக்கப்படும் ஷாருக்கான் அவர்கள், ‘பாலிவுட்டின் பாட்ஷா‘ என்றும், ‘கிங் கான்’ என்றும், ‘கிங் ஆஃப் ரொமான்ஸ்’ என்றும் ஊடங்களால் வழங்கப்படுகிறார். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தொலைக்காட்சி மூலமாகத் திரை முன்பு தோன்றிய அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் கால்பதித்தார். 1992ல், பாலிவுட்டில், ‘டர்’ என்ற திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
பின் மெல்ல நகர்ந்து, ஹீரோ என்ற அந்தஸ்தைக் கைப்பற்றி, முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் தனது பெயரைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். உலகளவில் ரசிகர்களைத் தனது நடிப்பால் ஈர்த்து, பில்லியன் கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ஒரே நடிகரென்ற பெருமைக்குரியவர்
பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரான இவர் தனது மகள் சுஹனா கானை விரைவில் சினிமாவில்அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில் அவரை பற்றிய செய்திகள், புகைப்படங்கள் என சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் தற்போது சுஹனா தனது தோழிகளுடன் பார்ட்டிக்கு சென்று குடித்து ஆட்டம் போட்ட வீடியோ வைரலாக பரவிவருகிறது. மேலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இதை பார்த்து லைக்குகள் குவிந்து வருகிறது.