சின்னத்திரை உலகில் மிகவும் ஒருசிலர்களே வெள்ளித்திரையில் பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் குணச்சித்திர நடிகரான பிரேம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன போட்டி ஒன்றில் கலந்து கொண்டதன் மூலம் சினிஉலகில் அறிமுகம் ஆனார்.
இவர் பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சூர்யா, விஜய் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார். காப்பான், விக்ரம் வேதா போன்ற படங்களில் இவரது நடிப்பு திறமை அனைவராலும் பேசப்பட்டது.
இந்நிலையில் பிரேம் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. மிகவும் சிறு வயதாக தோற்றமளிக்கும் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என்று அனைவரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது.
இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் நடைபெற்றதால்தான் இவ்வளவு பெரிய மகன் இருக்கிறார் என்று அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இவர் தற்போது தான் விஜயின் 64 படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேம் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் இதோ..