குப்பையில் இருந்து வெளிவந்த பேரதிர்ச்சி…! அதிஷ்டத்தை தூக்கி வீசியது யார்? நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி காணொளி

ஆண்டுதோறும் குழந்தைகள் தினத்தை கொண்டாடி மகிழ்கிறோம். ஆனால் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள், குழந்தை தொழிலாளர் முறைகளும் நம் சமூகத்தை விட்டுதள்ளி வைக்கப்படுகிறதா என்றால் மவுனம் தான் சமூகத்தின் பதிலாக இருக்கும். காலம் காலமாக கருவிலேயே அழிக்கப்படுவதும்.

காசுக்காக பிச்சை எடுக்க வைப்பதும் தொடர்கதையாகிக் கொண்டே தான் இருக்கிறது. கடுமையான சட்டங்களும், தண்டனைகளும் சமூகத்தை அச்சுறுத்தினாலும் கண்ணை மறைக்கும் கண்மூடித்தனமான சம்பவங்கள் அரங்கேறாமல் இல்லை.குப்பையில் இருந்து இளைஞர் ஒருவர் குழந்தை ஒன்றை மீட்டுள்ளார்.

குப்பையில் அழுகை சத்தம் வெளிவந்த போது குறித்த இளைஞர் பேரதிர்ச்சி அடைந்துள்ளார்.குழந்தை பிறந்து சில நொடிகளில் யாரோ தூக்கி குப்பையில் வீசியுள்ளனர். அதனை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைைத்தனர். அங்கு குழந்தைக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

பிறந்து 5மணி நேரமான பெண் குழந்தையை வீசி சென்றது யார், குழந்தையின் தாய் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த காட்சி தற்போது தீயாய் பரவி வருவதுடன், பச்சிளம் பெண் குழந்தை குப்பை தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.