
சினிமாவை பொறுத்தவரை நடிகர் நடிகைகளுக்கு எப்படி புகழ் உள்ளதோ அதுபோலவே குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் புகழ்பெறுகிறார்கள். அந்தவகையில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து கலக்கியவர்தான் சுரேகா வாணி.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் கலக்கியுள்ளார்.
இவர் நடித்த சில வெற்றிப்படங்கள் தெய்வதிருமகன் தல அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் ஆகியவை குறிப்பிட்டு சொல்லக்கூடிய படங்கள் ஆகும்.இவர் தெலுங்கில் 2005ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். தமிழில் இவரது முதல் திரைப்படம் தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன்தான். அதன்பிறகு ‘தெய்வதிருமள்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில்லா’, ’பிரம்மா’, ‘எதிர் நீச்சல்’, ‘மெர்சல்’, ‘விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
படங்களில் இவர் அதிகமாக குடும்பப்பாங்கான வேடங்களில் மற்றும் தோன்றுகிறார் ஆனால் நிஜவாழ்வில் செம மாடர்ன் இவர். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், தற்போது நுரை ததும்பும் குழியல் தொட்டியில் ஒயின் பாட்டிலுடன் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.