அபிராமி விவகாரம் தமிழக மக்களின் உள்ளங்களை சிதறடித்துள்ளது.வெறும் 2 மாத கள்ளக்காதலுக்காக 8 ஆண்டுகளாக குடும்பம் நடத்திய காதலனை அபிராமி உதறியுள்ளார்.இன்னும் எத்தனை எத்தனை அபிராமிகளையும், சுந்தரங்களையும் இந்த நாடு பார்க்கப் போகிறதோ என்ற வேதனையிலும், விரக்தியிலும் மக்கள் உள்ளனர். குன்றத்தூர் அருகே குழந்தைகளை கொன்ற அபிராமியை நேற்று ஸ்ரீபெரம்பத்தூர் நீதிமன்றம் ஆஜர்படுத்தப்பட்டார்.குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலாக மாறியது.
இந்நிலையில் சுந்தரத்துடன் நிரந்தரமாக வாழ முடிவு செய்த அபிராமி இரண்டு குழந்தைகளையும் குடும்பத்தினரையும் கொல்ல முடிவு செய்தார். தனது முடிவு குறித்து கள்ளக்காதலன் சுந்தரத்திடம் கூறிய அபிராமி அவரது ஆலோசனைப்படி கடந்த 30ம் தேதி இரவு இரண்டு குழந்தைகளுக்கும் தூக்க மாத்திரை கொடுத்து கொன்றுவிட்டார்.
கணவரை கொலை செய்ய சுமார் 12 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்தும், அது முடியாமல் போனதால் 1ஆம் தேதி அதிகாலை அங்கிருந்து அவர் தப்பி சென்றுள்ளார். இதனிடையே கள்ளக்காதலன் சுந்தரத்தை பிடித்த பொலிசார் அவரை வைத்தே அபிராமியை கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் அவரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அபிராமியை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.