தமிழகத்தின் திருப்பூரில் குழந்தை பாக்கியம் இல்லாததால் இன்னொருவரின் குழந்தையை கடத்தியதாக தம்பதி தெரிவித்துள்ளனர்.ஒடிசாவை சேர்ந்த புத்ததேவ், பேபிராணி என்ற தம்பதி திருப்பூரில் வசித்து வருகிறார்கள்.இவர்களின் ஒன்றரை வயது ஆண்குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிய போது காணாமல் போன நிலையில் புத்ததேவ் பொலிசில் புகார் அளித்தார்.
பொலிசார் விசாரணையில் அதே பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன் வசித்த சங்கர்ஷன் சேத்தி என்பவர் குழந்தையை கடத்தியது தெரியவந்தது.இதனையடுத்து கோவை அருகில் பதுங்கியிருந்த சங்கர்ஷன் மற்றும் அவரது மனைவி சுசித்ராவை பொலிசார் கைது செய்தனர்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், எங்களுக்கு திருமணமாகி குழந்தை இல்லை. அதனால் குழந்தை ஆசையில் இப்படி செய்தோம் என கூறியுள்ளனர்.