குழந்தை இறந்தே பிறந்தது சவப்பெட்டியில் வைத்து புதைத்த தாய்..! தோண்டி எடுத்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Honduras நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பமாக இருப்பதாக ஏமாற்றிய நிலையில் பிறந்து இறந்ததாக கூறப்பட்ட குழந்தைக்கு பதில் பொம்மையை புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெண்டோசா, இவர் மனைவி டியா, டியா தான் கர்ப்பமானதாக மெண்டோவிடமும், குடும்பத்தாரிடமும் கூறியுள்ளார்.

ஆனால் உண்மையிலேயே அவர் கர்ப்பமே ஆகவில்லை, வயிற்றில் துணியை வைத்து கொண்டு எல்லோரையும் ஏமாற்றியுள்ளார்.மேலும் தனது வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருப்பதாகவும் கணவரிடம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக மெண்டோவிடம் கூறிவிட்ட சென்ற டியா தனக்கு இரட்டை குழந்தை பிறந்ததாகவும், அதில் ஒரு குழந்தை இறந்துவிட்டதாகவும் இன்னொரு குழந்தை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.

மேலும், கையில் வெள்ளை நிறத்திலான சிறிய சவப்பெட்டியை கணவரிடம் காட்டிய டியா அதில் இறந்த குழந்தை உள்ளதாகவும், அதை மருத்துவர்கள் பூட்டிவிட்டதால் திறக்கமுடியாது எனவும் கூறினார்.பின்னர் உறவினர்கள் எல்லோரும் அங்கு வந்த நிலையில் சவப்பெட்டியை எல்லோரும் சேர்ந்து புதைத்தனர்.

ஆனால் டியாவின் செயல் அவர் கணவர் மெண்டோசாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் குழந்தையை புதைத்த இடத்துக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார்.அங்கு மண்ணை தோண்டி சவப்பெட்டியை எடுத்து உடைத்த போது உள்ளே பிளாஸ்டிக் குழந்தை பொம்மை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது தான் டியா கர்ப்பமாக இருப்பதாக ஏமாற்றியது தெரியவந்தது, கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவார் என்ற பயத்தில் அவர் இப்படி செய்துள்ளார்.ஒருவித பயத்தில் டியா இவ்வாறு செய்ததால் அவர் மீது இது குறித்து குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டாம் என மெண்டோசா முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.