பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ‘ஃப்ரீஸ் டாஸ்க் ‘ நடைபெற இருக்கிறது என்று இன்று வெளியான ப்ரோமோ வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. நேற்று முன்தினம் ஒலிபரப்பான ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருகின்க்றனர் என்பது தெரியவந்தது.அதே போல சமீபத்தில் வெளியான மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் ஜனனி ஐயரின் தாய் மீனாட்சி மற்றும் தங்கை கிருத்திகா ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர் என்பது தெரிகிறது.
மேலும், அந்த ப்ரோமோ வீடியோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள ஜனனனியின் தங்கை கீர்த்திகா, ஐஸ்வர்யாவிடம் வேண்டுமென்றே வம்பிழுத்து அவரை வெறுப்பேற்ற முயன்றது போல தெரிந்தது.அதே போல இன்று வெளியான முதல் பிரமோ வீடியோவில் சென்றாயன் மனைவி பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் , இதனால் சந்தோசத்தில் மூழ்கிய சென்றாயன் வேறு ஒரு மகிழ்ச்சியான செய்தியையும் கேட்கிறார்.பிக்பாஸ் வீட்டில் வெகுளி என்ற பெயரை பெற்றவர் நடிகர் சென்ராயன்.
இவர் செய்யும் விஷயங்கள் எல்லாமே கொஞ்சம் சின்ன பிள்ளை தனமாக இருக்கும், ஆனாலும் ரசிகர்கள் அவரை ரசிக்கிறார்கள். கடந்த 2 நாட்களாக பிக்பாஸ் பிரபலங்களின் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் நடந்த தொகுப்பில் சென்றாயன் மனைவி வந்து சென்றார். அதில் அவர் தான் கற்பமாக இருப்பதாக கூறி சென்றாயனை மகிழ்ச்சிகடலில் ஆழ்த்தினார்.
மேலும் சென்றாயனின் மனைவிக்கு நடிகை மும்தாஜ் தன் சொந்த வளையலை அணிவித்துள்ளார். இது வீடியோவில் அவ்வளவாக காமிக்கப்படவில்லை என்றாலும் கூட தற்போது புகைப்படங்களாக இணையத்தில் கசிந்துள்ளது. இதன் மதிப்பு முப்பது ஆயிரத்திற்கும் மேல் இருக்குமென வெளிவந்த சென்றாயன் மனைவி தரப்பு கூறுகிறது.