கொரிய மன்னரை மணந்த தமிழ்பெண்: வெளியான உண்மை தகவல்

தென் கொரிய மன்னரை செம்பவளம் என்ற தமிழ்பெண் மணந்தார் என்ற தகவலை தென் கொரிய தூதர் கியூஞ் சூ கிம் தெரிவித்துள்ளார். சென்னையில் முதலாம் உலக தமிழ் மாநாடு மற்றும் தமிழாய்வு அறக்கட்டளை தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தென் கொரிய தூதர் கியூஞ் சூ கிம், தென் கொரியாவுக்கும், தமிழகத்திற்கும் இடையே அதிகமான பாரம்பரிய உறவுகள் உள்ளன. பாண்டியநாட்டைச் சேர்ந்த செம்பவளம் என்ற பெண் பழங்காலத்தில் கொரிய வந்தபோது, கொரிய மன்னர் கிங்ஸ்ரோ என்பவரை மணந்து கொண்டார்.

செம்பவளம் தற்போது கியோ கவான் கொக் என்று கொரியா நாட்டில் அழைக்கப்படுகிறார் என்று கூறிய அவர், செம்பவளத்தின் படத்தை வெளியிட்டார். மேலும் தமது முதாரியரும் தமிழ் பெண்ணை மணந்ததாகவும் தெரிவித்தார்.