கொரோனாவை முன்னரே கணித்த ஜோதிட சிறுவன்!.. இவர் யார் தெரியுமா? வீடியோ உள்ளே

இந்தியாவை சேர்ந்த 14 வயது ஜோதிட சிறுவனான அபிக்யா ஆனந்த் 2019ம் ஆண்டிலேயே கொரோனா வைரஸ் பற்றி கணித்திருந்தார். இந்த வீடியோ வைரலாக அபிக்யாவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. யார் இவர்?
கர்நாடகாவைச் சேர்ந்த தம்பதியினர் ஆனந்த் ராமசுப்ரமணியன்- அனு ஆனந்த்.

இவர்களுக்கு கடந்த 2006ம் ஆண்டு அபிக்யா ஆனந்த் பிறந்தார், இவருக்கு ஒரு தங்கையும் உண்டு, பெயர் அபிக்தியா. ஆன்மிகத்தில்அதிக நாட்டமுள்ள அபிக்யா, சிறுவயதிலிருந்தே அது சார்பான பலபடிப்புகளை ஆர்வமாக படித்தார். அத்துடன் வேதங்கள் மற்றும் இதிசாகங்களையும் ஆர்வமுடன் படித்து வந்தார். மேலும் கிரகப்பெயர்ச்சி, ராசி பலன், ஜோதிட விஷயங்களை ஆதாரப் பூர்வமாக பேசுவது, அபிக்யாவின் ஸ்டைல்.

2015-ம் ஆண்டு பகவத்கீதா விருதும், 2016-ம் ஆண்டு ஸ்லோகாபிரவீனா விருதும், ஸ்பந்தன்ஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதமே 2020ம் ஆண்டு ஏற்படப் போகும் விளைவுகள் பற்றி பேசினார். அதில், உலகப் பொருளாதாரம் கடுமையாக பாதிப்படையும் என்றதுடன், கொரோனா வைரஸ் மே 29ம் திகதி கட்டுக்குள் வரும் என்றும் கணித்திருந்தார்.