கொரோனா அச்சத்தால் வீட்டில் முடங்கிய நபர்! பின்பக்கத்தில் உள்ள இடத்தை தோண்டிய போது காத்திருந்த ஆச்சரியம்.. புகைப்படங்கள்

பிரித்தானியாவில் கொரோனா அச்சத்தால் வீட்டில் முடங்கியிருந்த நபர் பின்புறம் உள்ள இடத்தில் தோண்டிய போது உள்ளே 50 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட காரை கண்டுபிடித்துள்ளார். Heckmondwike-ஐ சேர்ந்தவர் ஜான் பிராய்ஷா. பிரித்தானியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பணிக்கு செல்ல முடியாமல் இருந்த ஜான் வீட்டின் பின்புறத்துக்கு சென்று ஒரு இடத்தை தோண்டியுள்ளார். ஆழமாக தோண்ட உள்ளே ஏதோ பெரிய பொருள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

முதலில் அது bomb shelter எனப்படும் வெடிகுண்டுகள் தாக்குவதை தடுக்கும் இடம் என நினைத்தார், ஆனால் இன்னும் அதிகம் தோண்டிய போதே அது கார்களின் பாகங்கள் என தெரிந்து ஆச்சரியமடைந்தார். இது குறித்து ஜான் கூறுகையில், நான் இந்த வீட்டில் குடியேறி 6 மாதங்கள் தான் ஆகிறது. பின்பகுதியில் ஆழமாக தோண்டிய போது காரின் பகுதிகள் உள்ளே புதைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. 50 வருடங்களுக்கு முன்னர் இந்த கார் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறேன்.

ஆனால் கார்களின் சக்கரம் மட்டும் அதில் இல்லை, வீட்டின் உரிமையாளர்களிடம் கேட்ட போது தங்களுக்கு அது குறித்து தெரியாது எனவும் தங்களின் முன்னோர்கள் காலத்தில் எதாவது புதைக்கப்பட்டிருக்கலாம் என கூறியதாக தெரிவித்துள்ளார். தற்போது வரை ஜான் காரின் சில பாகங்களை எடுத்துள்ளார், மேலும் அந்த இடத்தை கனரக வாகனத்தை கொண்டு பெரிதாக தோண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.