கொலைக்கு முன்பு பல முறை தனிமையில் இருந்த கல்லூரி மாணவி… வெளியான அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம் ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளை சாமி. இவருடைய மகள் பிரகதி இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பிரகதிக்கு நாட்டுதுரை என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களுக்கு வருகிற ஜூன் மாதம் 13-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி கல்லூரியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட பிரகதி மாயமானார். ஆனால் காணாமல் போன பிரகதி நேற்று முன்தினம் பொள்ளாச்சி அருகே பூசாரிபட்டியில் ரோட்டோரத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோமங்கலம் பொலிசார் கல்லூரி மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆடைகள் களைந்து இருந்ததால் அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்த 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. மாணவி பிரகதி காணாமல் போனதை தொடர்ந்து கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், மாணவி பிரகதியை ஒரு வாலிபர் அழைத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

மேலும் பிரகதியின் செல்போனில் பதிவாகி இருந்த எண்களை ஆய்வு செய்தபோது, இந்த கொலையில் முக்கிய துப்பு கிடைத்தது. பிரகதியின் உறவினர் சதீஷ்குமார் என்பவர் தான் இந்த கொலைக்கு காரணம் என்பதை தனிப்படை பொலிசார் கண்டுபிடித்தனர். தலைமறைவான அவரை பொலிசார் பல இடங்களில் தேடி ஒட்டன்சத்திரம் பகுதியில் நேற்று மடக்கிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில், சதீஷ்குமாருக்கு பிரகதி அத்தை மகள் என்பதும், பிரகதி பள்ளியில் படிக்கும் போது இருந்து அவர்களுக்குள் பழக்கம் இருந்துள்ளது. இதனால் சதீஷ்குமார், பிரகதியை முறைப்படி பெண் கேட்டுள்ளார். ஆனால் பிரகதியின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்து விட்டனர். ஆனாலும் பிரகதியும், சதீஷ்குமாரும் ஒருவரை ஒருவர் விரும்பி உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் சதீஷ்குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. திருமணத்துக்கு பின்னர் கேரள மாநிலம் பாலக்காடு அருகே கொடுவாயூரில் சதீஷ்குமார் அடகு கடை நடத்தி வந்தார். கோவையில் பிரகதி கல்லூரியில் படித்து வந்ததால், மனைவிக்கு தெரியாமல் அவர், பிரகதியை அடிக்கடி வந்து சந்தித்துள்ளார். மேலும் பிரகதிக்கு பரிசு பொருட்கள், சேலை, நகைகள் வாங்கி கொடுத்துள்ளார். ஏற்கனவே 10 பவுன் தங்கநகை வாங்கி கொடுத்துள்ளார். அதேநேரத்தில் தனக்கு . திருமணம் ஆனாலும் சதீசுடன் தொடர்ந்து பழகுவேன் என்றும் பிரகதி உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் தான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மாணவி பிரகதியை சந்திப்பதற்காக சதீஷ்குமார் காரில் வந்துள்ளார். பிரகதி அவருடன் காரில் சென்றார். இருவரும் பொள்ளாச்சி பகுதியை நோக்கி சென்றுள்ளனர். அப்போது, தனக்கு திருமணம் நிச்சயமான விவரத்தை மாணவி பிரகதி கூறியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார், கத்தியால் பிரகதியின் கழுத்தில் குத்தி கொலை செய்து பிணத்தை பூசாரிப்பட்டி பகுதியில் போட்டுவிட்டு காரில் தப்பிச்சென்றுவிட்டார். இந்நிலையில் மாணவி பிரகதியின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் மாணவியின் மணிக்கட்டு, கை விரல்களை உடைத்துள்ளதாகவும், கழுத்து, தோள்பட்டை, மார்பு ஆகிய இடங்களில் கத்தியால் குத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சதிஷ்குமாரும் பிரகதியும் காரிலேயே பல முறை உறவு கொண்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்னகப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாணை நடைபெற்று வருகிறது.