நடிகைகள் என்று வரும் போது ஃபிட்னஸ் உடன் சேர்ந்து அழகும் முக்கியம். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ஆரோக்கியத்தையும், அழகையும் பேணிக்காக்க தமிழர் பாரம்பரிய முறைகளை பின்பற்றுகிறார். தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பாராம். புரோட்டின் உணவுகள் அதிகமாக உணவில் எடுத்து கொள்ளுவாராம். வெள்ளை அரிசி சாப்பாடு, பால், வெள்ளை சக்கரை போன்ற வெள்ளை நிற உணவுகளை சேர்த்து கொள்வதில்லையாம். வெயிலில் அதிக நேரம் இருந்துவிட்டு வந்தால், வீட்டுக்கு வந்தவுடன் புளித்த தயிர் அப்ளை செய்து குளிப்பாராம். நேரம் கிடைக்கும் போது எண்ணெய் தேய்த்து குளிப்பாராம். பொதுவாக தோல் சுருக்கம் ஏற்படாமல் இருக்க வெந்நீர் குளியலை தவிர்த்து விடுவாராம்.
ஆயுர்வேத குளியல் மருத்துவ குறிப்புகளையும் பின்பற்றுகிறாராம். டயட் என்று ஏதுவும்மில்லையாம். கீர்த்தி உண்மையில் சாப்பாட்டு பிரியராம். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிடுவாராம். ஆனாலும், உணவை தேர்வு செய்து தான் சாப்பிடுகிறார். சாக்லேட் அதிகமாக சாப்பிடுவாராம். வாழையிலை சாப்பாடு என்றால் கொள்ளை பிரியமாம். வெள்ளை அரிசிக்கு பதிலாக, பிரவுன் அரிசி தான் சேர்த்துக் கொள்கிறாராம். அவரின் அழகில் வாழையிலை சாப்பாடு அதிகம் பங்கு கொள்கின்றது. ஏன் கட்டாயம் வாழை இலையில் சாப்பிட வேண்டும்? இது அற்புதமான கிருமி நாசினி. சுட சுட உணவுகளையும், பொங்கலையும் இதில் சாப்பிடுவதால் ருசியோடு இதன் சத்துக்களும் நமது உடலுக்கு போய் சேர்கிறது. குடலில் தங்கும் கிருமிகளை கொல்கிறது.
நாம் சாப்பிடும் உணவுகளில் நச்சிருந்தால் அவற்றை முறிக்கும் சக்தி வாழை இலைக்கு உண்டு. ஆகவேதான் அந்த காலத்தில் வாழை இலையில் உணவை சாப்பிட்டார்கள். ஆரோக்கியமட்டுமல்ல. அழகுக் கூட்டி தரும். வாழை இலை. தொடர்ந்து வாழை இலையில் சாப்பிட்டு வந்தால், சருமம் பளபளக்கு. மந்தம், பித்தம் குறையும். சுருக்கங்கள் தள்ளிப் போகும். வாழை இலையிலுள்ள குளோரோஃபில் உணவுகளை எளிதில் ஜீரணம்டையச் செய்யும். வயிற்றுப் புண்களை ஆற்றும். வாழை இலையில் உணவை கட்டுவதால் கெட்டுப் போகாது. நீண்ட நேரம் வரை தாங்கும். இது பாதுகாப்பானதும் கூட.
வாழை இலையை கழுவி, அதன் மேல் நெய்யை தடவி அந்த இலையில் சூடான உணவுகளை வைக்கும் போது, மேற்கண்ட சத்துக்களெல்லாம் குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து விடுகின்றன. தமிழர்கள் இதனால்தான் வாழையிலையில் சாப்பிடும் பாரம்பரியத்தை கொண்டு வந்தனர். அது மட்டும் இல்லை ஒவ்வொரு முறை வாழை இலையில் சாப்பிடும் பொழுதும் நமக்கும் ஆயுள் கூடுகிறதாம். தினமும் யோகா.. தவறாமல் ஜிம் செல்கிறார். ஒருவேளை சாப்பாடு சாப்பிட்டதும் 20 நிமிடங்கள் நடைபயிற்சி செய்கிறார்.