தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வித்தியாசமாக உதவியை செய்து இயக்குனர் சமுத்திரக்கனி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறார். தமிழ் சினிமாவில் சில நடிகர்கள், இயக்குனர்களை பார்க்கும் போது நமது உறவினர்கள் அல்லது நமது வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் அண்டை வீட்டுகாரர் போல் தோன்றும். ஏனெனில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் அந்த அளவிற்கு இருக்கும். அந்த வகையில் இயக்குனர் சமுத்திரக்கனி நடிக்கும் படங்களில் இவரைத் தவிர வேறு யாரு நடித்திருந்தாலும், அந்தளவிற்கு இருந்திருக்காது என்று பெயர் பெற்றவர்.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக தமிழகத்தை உலுக்கிய கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன. அவர்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் புயல் காற்றால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. நிலை சரிந்து கீழே விழுந்துள்ள மின்கம்பிகளை சரிசெய்யும் பணி முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது.
இதனிடையில் மின்சாரம் இன்றில் தவித்து வரும் டெல்டா மக்களுக்கு சமுத்திரக்கனி ஜெனரேட்டர் கொடுத்து உதவியுள்ளார். மின்சாரம் இல்லாமல் மக்கள் தங்கள் செல்போனுக்கு சார்ஜ் போட முடியவில்லை. செல்போனுக்கு சார்ஜ் போட்டால் தான் தங்கள் ஊருக்கு என்ன தேவைபடுகிறது என்று அவர்களால் வெளி மக்களுக்கு சொல்ல முடியும்.
இந்த பிரச்சனையால் மக்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர். இதனை சரிசெய்யும் விதமாக சமுத்திரக்கனி ஜெனரேட்டர் வாங்கி அனுப்பி வைத்துள்ளார். சமுத்திரக்கனியின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஜெனரேட்டர் தங்களுக்கு பெரும் உதவியாக இருப்பதாக அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர். மேலும் சமுத்திரக்கனியின் இந்த உதவியைக் கண்ட இணையவாசிகள் இவரால் மட்டுமே இப்படி யோசிக்க முடியும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.