![drs srkae fs](https://tamilanmedia.in/wp-content/uploads/2018/11/drs-srkae-fs.jpg)
இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இப்படம் கடந்த தீபாவளியன்று வெளியானது. அரசியலில் இறங்கப்போவதை விஜய், சர்கார் பட இசை வெளியீட்டு விழாவில் வெளிப்படையாகவே பேசினார்.இதனால் சர்கார் படத்தில் அரசியல் சம்பந்தமான காட்சிகள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப் போன்றே படத்தில் அரசியல் காட்சிகள் இருந்தன. இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், இப்படத்தில் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்துவது போன்று காட்சி இருப்பதாக கூறி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
அதுமட்டுமின்றி தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதனால், கோபமான அவர்கள் விஜய் பேனரை கிழிக்க, விஜய் ஏதாவது அதிரடியாக முடிவெடுப்பார் என்று தான் எதிர்ப்பார்த்தனர்.ஆனால், இவரோ முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக செய்திகள் வந்து வருகின்றது, இதை பார்த்த ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி தான்.சர்கார் திரைக்கு வந்து செம்ம வெற்றியை பெற்று வருகின்றது.
இந்த நேரத்தில் படத்தில் ஆளுங்கட்சியினரை தாக்குவது போல் காட்சிகள் இருப்பதாக கூறப்பட்டது. இதனால், கோபமான அவர்கள் விஜய் பேனரை கிழிக்க, விஜய் ஏதாவது அதிரடியாக முடிவெடுப்பார் என்று தான் எதிர்ப்பார்த்தனர்.ஆனால், இவரோ முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக செய்திகள் வந்து வருகின்றது, இதை பார்த்த ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி தான்.
இதற்கு முன்னர் தலைவா பட விவகாரத்தின் போது, விஜய் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக கொடநாட்டிற்கு சென்றிருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.