சர்க்கரை நோய் என்பது நோயல்ல ஒரு குறைபாடு. கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும். இதைத்தான் `டயாபடீஸ்’ என ஆங்கிலத்திலும் `சர்க்கரைநோய்’ எனத் தமிழிலும் சொல்கிறோம்.
மற்ற நாடுகளில் 55 வயதிலும், இந்தியாவில் 40 வயதிலும் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்’ என்கின்றன ஆய்வுகள். சர்க்கரை நோயிற்கு முக்கியமான காரணம் உணவு பழக்கவழக்கம் மட்டும் சில உணவு வகைகள் தான்.இந்த வகையில் சர்க்கரை நோய்யாளிகள் அறவே ஒதுக்க வேண்டிய ஒரு பழத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்.
அன்னாசி பழத்தை அளவாக சாப்பிட்டால் பயன்கொடுக்க கூடியதாக இருக்கும். இதில் பல உடல்நல பயன்கள் இருப்பது போல சில உடல் நலத்தை பாதிக்கும் காரணிகளும் அடங்கியுள்ளன.
அன்னாசிப்பழத்தில் இயற்கையான சர்க்கரை அடங்கியுள்ளது. எனவே, இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லதல்ல.அன்னாசி பழத்தில் ப்ரோம்லைன் உள்ளது. இது நாம் உண்ணும் சில மருந்துகளோடு சேர்ந்து கொண்டு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் பழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ் போட்டு குடித்தாலோ அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.
அன்னாசி பழத்தை அதிகமாக உட்கொண்டால் பற்களில் அதிகம் கரை ஏற்படும். பற்களின் எனாமலின் மீதும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.அன்னாசி பழம் சாப்பிடுவதால் சிலருக்கு லேசான அலர்ஜிகள் ஏற்படலாம். அன்னாசி பழத்தில் அதிக அளவிலான அசிடிட்டி உள்ளது.