
விஜய்யின் சர்கார் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. முருகதாஸ்-விஜய் கூட்டணி என்பதாலேயே எதையும் கேட்டாமல் பல ரசிகர்கள் டிக்கெட் புக்கிங் செய்கின்றனர்.விஜய் ரசிகர்கள் வழக்கம் போல் படத்தை கொண்டாடினாலும் கலவையான விமர்சனம் தான் படத்திற்கு வந்திருக்கிறது.வேலூர் மாவட்டத்தில் ஈராளச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தயாளன். இவரின் மகன் மணிகண்டன் தங்கள் வீட்டிற்கு முன் ரசிகர்களால் வைக்கப்பட்ட சர்கார் பட பேனர்களை கிழித்து எரிந்துள்ளார். இதனால் அங்கிருக்கும் விஜய் ரசிகர்களுக்கும், மது அருந்தியிருக்கும் மணிகண்டனுக்கும் அடிதடி நடந்துள்ளது.
இதைப்பார்த்த மணிகண்டன் உறவினர்கள் அவரை தங்களது வீட்டிற்குள் அடைத்துள்ளனர். பின் சிறிது நேரம் கழித்து உள்ளே போய் பார்த்தால் மணிகண்டன் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.அவரே மற்றவர்கள் அடித்தது தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார்களா? இல்லை விஜய் ரசிகர்கள் ரகசியமாக அவரை கொண்டுவிட்டாரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.