சர்ச்சையில் சிக்கிய சீரியல் நடிகை ஜெயஸ்ரீயின் முதல் கணவர் இவர் தானா…? இணையத்தில் வைரலாகும் வீடியோ

கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களளில் பூதாகரமாக பேசப்பட்டு வரும் விடயம் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ குடும்ப பிரச்ச்சனை தான். தேவதையை கண்டேன் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் ஈஸ்வர். இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்த நடிகை ஜெயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில், சில தினங்களாக கருத்து வேறுபாட்டால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது பூதாகரமான நிலையில், நடிகை ஜெயஸ்ரீ, தன் கணவர் தனது மகளிடம் தவறாக நடந்துகொள்கிறார் என்று புகார் கொடுக்க, ஈஸ்வர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், 3 தினங்களுக்கு பிறகு பெயிலில் வெளிவந்த ஈஸ்வர் செய்தியாளர்களிடம் தனது மனைவி குறித்து பல சர்ச்சையான கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், ஜெயஸ்ரீ தனது முதல் கணவரிடம் 2.5 கோடி கேட்டு மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், பலரும் சீரியல் நடிகை ஜெயஸ்ரீயின் முதல் கணவர் யார் என்று சமூக வலைதளங்களில் தேட தொடங்கியுள்ளனர். தற்போது அவரது முதல் கணவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெயஸ்ரீயின் கணவர் மதன் என்பவர் தான். மேலும், மதன் ஜெயஸ்ரீ குழந்தை ரேத்வாவுடன் குழந்தையிலிருந்து இருக்கும் போது எடுக்கப் வீடியோ மற்றும் குழந்தைக்கு எடுக்கப்பட்ட முதல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ரேத்வாவை கொஞ்சுவதும், அவளுடன் பல இடங்களில் சுற்றும் போது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியிட்டு உள்ளார்கள்.