நிறம் மாறாத பூக்கள் என்பது 2017 ல் ஜீ தமிழ் தொலைகாட்சியில் அக்டோபர் 9, முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒளிபரப்பாகும் காதல் பின்னணியை கொண்ட தொலைக்காட்சி தொடர். இந்த தொடரை ம. இனியன் தினேஷ் மற்றும் ப.நிரவி பாண்டியன் என்பவர் இயக்க, முரளி, நிஷிமா, விஷ்ணுபிரியா தரிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.[2] இந்த தொடரை பிரபல சின்னத்திரை நடிகை நீலிமா ராணி தயாரிக்கிறார். ராம் மற்றும் வெண்மதி சிறுவயது நண்பர்களாக இருக்கும் போது இருவரும் காதலித்தனர், ஒரு விபத்தில் ராம் பழைய நினைவுகளை மறந்து போகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
அதே நிலையில் சென்னைக்கு வருகின்றார், சில வருடம் கழிந்து ராம் கீர்த்தி எனும் பெண்ணை காதலிக்கிறார். தனது இளம் வயது காதலனை தேடி சென்னைக்கு வரும் வெண்மதி மறுபடியும் ராமை சந்திக்கிறாள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ராம் வெண்மதியை திருமணம் செய்கின்றான். இந்த விடயம் கீர்த்திக்கு தெரியவர இவர்களின் மூவரின் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பது தான் கதை. மேலும் அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….