சற்று முன் குளியல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல சீரியல் நடிகை

மனிதர்களின் வாழ்க்கை நிலை இல்லாத ஒன்று என நமக்கு தெரிந்தாலும், எதிர்பாராமல் நடக்கும் சில விஷயங்கள் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மட்டுமே இருக்கிறது.நன்றாக குடும்பத்தினரிடம் பேசி கொண்டிருந்த ஒரு நபர் திடீரென மரணித்தால் அது யூகிக்க கூட முடியாத அதிர்ச்சியாக இருக்கும். கடந்த சில மாதங்களாவே அடுத்தடுத்து பிரபலங்களின் மரணம் தொடர்ந்துகொண்ட இருக்கிறது. இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் பாத்துறூமில் இறந்து கிடந்துள்ளார். இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Yeh Hai Mohabbtein என்ற சீரியலில் வேலைக்காரி வேடத்தில் நடித்து வந்தவர் நடிகை நீறு அகர்வால்.இவர் நேற்று குளியலறையில் மயங்கி கிடந்துள்ளார். அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என நினைப்பதற்குள் அவரின் உயிர் பிரிந்துவிட்டது.

கடந்த நான்கு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.நீறு அகர்வால் இந்த தீடீர் மறைவுக்கு ரசிகர்களும் மற்றும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.தாய் இறந்த உடன் மகள் தான் மற்றவர்களுக்கு அந்த தகவலை தெரிவித்துள்ளார். நீருவின் மரண செய்தி அறிந்து ஏ ஹை மொஹப்பதைன் கலைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.